வானில்
அம்மலையின்
அதீத உச்சத்தின் விளிம்பில்
நின்று கொண்டிருக்கிறாள் அவள்...!
உடலின் சிறகுகளிலிருந்து
இறகுகள் ஒவ்வொன்றாய்
பிடுங்கப் பட்டத்திற்கான சுவடுகள்
உத்திரமாய் கசிகின்றன...!
பெரும் தெளிவுடனும்
சிறு குழப்பத்துடனும்
ஒவ்வொரு அடியாய்
நகர்ந்துகொண்டிருக்கிறாள் ...!
இதோ
அடுத்த அடியினை வானில் பதித்து
உதிரும் பாறையாய்
விழுந்து கொண்டிருக்கிறாள் ..!
உடலின் ஒவ்வொரு அணுவிலிருந்தும்
இறகுகள் முளைக்கத் தொடங்குகின்றன ....!
உடல் தரையைத் தொட்ட
அப்புள்ளியிலிருந்து
சிறகுகளுடன் பறக்கத் தொடங்கிவிட்டாள் ...!
கௌ. விஜயசாந்தி