உன் நினைவுகளினால்

தூறும் தூரல்களோடு
தூரம் கடக்க வேண்டும்
துணையாக உன்னோடு..

அதிகாலை கதிரொளி
உன்னை நெருங்கும் முன்னே
எந்தன் கண்ணொளி
கிடக்க வேண்டும் உன்னோடு..

பயம் சிந்தும் இரவில்
நான் பதற்றமாய் தவிக்க
பல முத்தம் வேண்டும் உன்னோடு..

நீ இதழ் சுளித்து நகைக்கும்
நிமிடங்களால் தான்
என் இதயம் சுருங்கி
விரிகின்றது..

உன் முகம் ரசித்து
முடியும் இரவுகளால் தான்
என் இமைகள் உறங்காமல்
பிரிகின்றது..

என் கவிதை கசியும்
காகிதங்கள் எல்லாம்
உன் காதலினால் தான்..

உன் முக மச்சங்களாய்
ஒட்டிக் கொள்ள ஆசை
நீ முகம் கழுவினாலும்
உனை நழுவாமல் கிடக்க..

தூசிக் காற்றிலும் என்னை
தூக்கிப் பறக்கின்றன
உந்தன் சிகை வாசம்..

உந்தன் உடல் உஷ்ணங்களுக்காக
உறையும் பனியில்
உறங்காமல் பயணிப்பேன்..

என்னருகே நீயில்லாத பொழுதும்
நிறுத்த முடியவில்லை
என் கவிதைகளை
உன் நினைவுகளினால்...!!



செ மணி

எழுதியவர் : செ மணிகண்டன் (14-Oct-16, 12:47 pm)
பார்வை : 92

மேலே