கவிதை 133 நம் கலாச்சாரம்

கார்மேகம் கண்ட மயிலும்
தோகைவிரிக்க மறுத்ததென்னவோ
அன்புமழையில் நனைந்த மனமும்
பாலைவனமாய் மாறியதென்னவோ

குளிந்தநீரை பருகிய நதியும்
சாக்கடையாய் போனதென்னவோ
தென்றலாய் வந்த சொல்லும்
வெப்பமாய் சுட்டதென்னவோ

தியாகத்தால் பெற்ற வளர்ச்சி
சுயநலத்தால் கருகுவதென்னவோ
வேகமாய் செல்லும் வாழ்வு
விவேகமின்றி தடுமாறுவதென்னவோ

பாசத்தால் வளர்த்த உள்ளங்களை
செல்வத்தால் ஒதுக்குவதென்னவோ
நாகரீகம் என்னும் பெயரில்
அநாகரீகம் தலைவிரித்தாடுவதென்னவோ

சிந்தனையில் மலர்ந்த எண்ணங்கள்
அழிவை கொடுப்பதென்னவோ
நம்கலாச்சாரம் என்னும் பெருமை
வளர்ச்சியில் சிதைந்ததென்னவோ

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (14-Oct-16, 9:23 pm)
பார்வை : 95

மேலே