என் சுயகண்ணியம்

சம்பளமும் இல்லையே
என் பலமும் இல்லையே
இருப்பை கொண்டு பிழைக்க
பின்புலமும் இல்லையே
பொறுப்பை கண்டு வியக்க
அன்புள்ளமும் இல்லையே
உழைப்பை குடிக்கும் அதிகார
உண்ணியும்
பிழைப்பை பழிக்கும் சதிகாரரை
எண்ணியும்
வெறுப்பை காட்டி விலகிட
அந்த பணகாகிதம் அறியுமா?
என் சுயகண்ணியம்