கொள்கையாய்க் கொள்க

வளைந்த முதுகில் சுமந்திடும் பாரம்
முதிர்ந்த வயதில் வற்றாத உழைப்பு !
ஓடிடும் குருதியில் குன்றாத மனவுறுதி
வாடிய முகத்திலும் வாடாத வாழ்க்கை !
தள்ளாடும் நிலையில் முன்னேறும் முறை
வாழ்ந்திடும் மூதாட்டி திகழும் முன்மாதிரி !
வளரும் தலைமுறைக்குப் பாடமான காட்சி
தளரும் நெஞ்சங்களுக்கு இப்படமே சாட்சி !
நோக்கும் மனங்களே கருணையுடன் காண்க
வாக்கும் அளித்திடுக கொள்கையாய் கொள்க !
வாழும்வரை உதவிடுக வாழ்ந்ததின் பயனாக
முதியோரை கைவிடாது மதித்திடுக அன்புடனே !
பழனி குமார்