ஊர்வசியின் சாபம் பல விகற்ப பஃறொடை வெண்பா இந்திர லோகத் தழகிகள் நால்வரும்
ஊர்வசியின் சாபம் ..
இந்திர லோகத் தழகிகள் நால்வரும்
சந்தனம் தேய்த்துடல் மந்தா கினியில்
குளித்திரு வேளையில் சூரிய தேவனை
அர்ஜுன் தொழுதிட ஊர்வசி கண்டதும்
கொண்டாள் அவன்மேல்மோ கம்
மோக வலையினில் சிக்கிய ஊர்வசி
சந்தன மேனி நனைந்திரு ஆடையில்
விம்மி யெழுகிற அஞ்சுகம் கண்டால்
தழுவிக்கொள் வானென்றோர் ஆசையில் நின்றிடச்
சென்றாள் விஜயன்முன் னில்
சூரியவ ணக்கம் நிறைவு பெறவே
விஜயன் விழிகள் திறந்த உடனே
எதிரில் இருக்கும் அழகியைக் கண்டு
அழகே அழகின் அழகே எதற்கென்முன்
வந்தாய்யென் றேவின வ
குந்தியின் புத்திரன் வில்லேந்தும் வீரன்
உளமீ தெனக்கோர் நசையும் உளதே
உளமிரு தாகம் தணித்திடல் வேண்டும்
பரந்திரு மார்பில் ஒருமுறை யேனும்
எனைநீ அணைத்திருபோ தும்
காவிய ணிந்தவர் காமம் தவிர்ப்பவர்
இந்திரன் ஆசி பெறுவதற் காக
தனியாய்வந் தேனிங்கே மன்னித் தருள்வாய்வுன்
மோக வலையினில் வீழ்த்திடாமல் விட்டொழிந்து
சென்றிடு என்றேசொல் ல
கட்டழகு பெட்டகம்மேல் கைவைத்துப் பாராமல்
விட்டொழிந்து போவென்ற மானுடனே பெற்றுக்கொள்
போகும்முன் என்சாபம் ஆண்பெண் இரண்டுமிலா
ஓர்நிலையில் திக்கெட்டும் சுற்றித் திரிய
திருநங்கை ஆகக் கட
15-10-2016