காத்திருக்கிறேன்
கண்மூடி அழுகின்றேன்
உன்னை நினைத்து
நீ இல்லை என்று தெரிந்தும் ...
உன் நினைவுகளுடன்
போட்டியிடுகிறேன்
தோற்றுவிடுவேன் என்று தெரிந்தும் ....
கனவிலும் காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக
வரமாட்டாய் என்று தெரிந்தும்...
நினைவினை இழக்கிறேன்
நிஜமாக நீ இல்லை
என்று தெரிந்தும் ....
உன் வார்த்தை
என்னை காயப்படுத்தும்
காத்திருக்கிறேன் அது தெரிந்தும்....
என் வாழ் நாட்கள்
நீ இல்லை வாழாமல்
காத்திருக்கிறேன் அது தெரிந்தும் ....
நீ எனை பற்றி
நினைக்கவில்லை
உன்னை பற்றியே
நினைத்து என் வாழ்நாள் முழுதும்
காத்திருக்கிறேன் ....
நீ வருவாய் என்று ....