எம் தலை விதி

காடு இழந்தோம்
கரைகள் கடந்தோம்
இருக்க இடமின்றி
அனாதைகள் ஆனோம்
விண்ணை கண்டோம்
மின் மினி கண்டோம்
புது விடியல் காணாமல்
கண்கள் இழந்தோம்
கூட்டாய் இருந்தோம்
குடும்பங்கள் கொண்டோம்
பெயர் சொல்ல
குழந்தை அற்றோம்
பயிர்கள் செய்தோம்
பழங்கள் புசித்தோம்
நிலங்கள் அற்று
சின்ன பின்னமானோம்
இன்னும் இருக்கிறோம்
இறைவனிடம் துதிக்கிறோம்
அவயங்கள் அற்று
அவதி கொண்டோம்