ரசனை ராகமே

பெண்ணே!
உன் ஒவ்வொரு புன்னகையும் ,
என் பேணா முனையை தவழ வைக்கிறது....நான் எழுதும் கவிதையின் மேற்கூரையிலே !!
பகல்- இரவு ,நிறம்-பாவனை என பகுத்தறியும் கண்கள் முழுதும் ,
உன்னுருவக் கனவுகள் மட்டுமே பார்க்கும் Robo ஆகிவிட்டதே......கண்ணே!!
உன்பால் கொண்ட காதல் மிகுதியில்,
என் செய்கையில் உன் பெண்மை வெளிப்பட ,
நீ எனை அணைத்த புயல்வேகம் கண்டு ,
நிலவும் கண் கூசி , விடியலில் மறையுதடி ,
என் ஆண்மை உன்னிடம் சென்றதை உணர்ந்தேனடி !!