எழுத்தாளர் ஏகாம்பரம்

ஏக பரம்பொருளான சிவனைக் குறிக்கும் பெயர் ஏகாம்பரம். அரசியல்
அரசியல் கட்டுரைகள் ,சினிமா விமர்சனங்கள் , சிறுகதைகள் , பல ஏகாம்பரத்தின் பேனாவிலிருந்து கற்பனை கலந்து உருவாகியவை. எளிமையான தமிழில் நகைச்சுவையோடு மண்வாசனையோடு பேச்சுத் தமிழில் எழுதும் திறமை படைத்தவர். கிராமத்துச் சூழலை தன் எழுத்தில் அப்படியே படம் பிடித்துக் காட்டுவார்;. ஊர் அரசியல் பிரச்சனைகளை யாதார்த்தமான கண்ணணோட்டத்தில் விமர்சித்து எழுதுவார். அவர் எழுத்துக்கள் அவரை ஒரு முற்போக்கு ஏழுத்தாளராக வாசகர்களிடம் பெயர வாங்கவைத்தது. சாதராண கும்பத்தில் அச்சுவேலி கிராமத்தில் பிறந்;தவர். தாயும் தகப்பனும் தமிழ் ஆசிரியர்கள். அவருக்கு எழுத வித்திட்டவர் அவரது தாய் அன்னலஷ்மி.

ஊரில் உள்ள சாதி, மூடநம்பிக்ழககைள் , மதம் வேற்றுமை போன்ற பிரச்சனைகளைப் குறிவைத்து எழுதுவாhர். சேரி வாழ் ஏழை மக்களும் உழைப்பாளிகளுமே அவரின் முக்கிய கதாபாத்திரங்கள். அவர் புதுமைப்பித்தன் ஸ்டைலை பின்பற்றுகிறார் என்று பலர் விமர்சித்தாலும் அவரின் எழுத்து காலத்தோடு மாறுபட்டு, யதார்த்தாக அறிவியல் கலந்தவையாக இருந்தன.

ஏகாம்பரம் அன்மையில் எழுதத் தொடங்கிய எழுத்தாளர் அல்ல. அவரை எனக்கு பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது முதற்கொண்டே தெரியும். அவருக்கு பத்துவயதாக இருக்கும் போது யாழ்ப்பாணத்து மணிக்கூட்டு கோபரத்தடியில் பிச்சை எடுத்த பிழைத்த பிச்சைக்காரி ஒருத்தியப்பற்றியது அவர் எழுதிய முதற் சிறுகதை. அவளை “நாய்குட்டி விசரி” ஊரில் பலர். அதற்கு காரணம் தெரு நாய்கள் அவளை சுற்றியே எப்போது இருக்கும். அதன் காரணத்தை அறிய அவளது வரலாறு பற்றி பலரிடம் விசாரித்து அறிந்த பின்னரே ஏகாம்பரம் எழுதிய முதற்கதை “பிச்சைக்காhரி”.

ஏகாம்;பரம் வாசிக்காத தமிழ் ஆங்கிலப் புத்தகங்கள் கிடையாது. கல்கியின் இரசிகர் அவர். நகைச்சுவை கலந்த கல்கியின் எழுத்து அவருக்குப் பிடிக்கும். புதுமைப் பித்தன் , ஜெயகாந்தன், அகிலன், லஷ்மி, சிவசங்கரி போன்றோரின் கதைகள் கூட அவருக்குப் பிடிக்கும். ஈழத்தில் உள்ள எழுத்தாளர்களின் கதை மண்வாசனை வீசும் கதைகள் என்பார். அதில் முத்துலிங்கம் , டொமினிக் ஜீவா, கனேசலிங்கன் , செங்கையாழியான் போன்றவர்களின் கதைகளை விரும்பிப் படிப்பார். அவர்களைப் போலத் தானும் பிரபல்யமாக வேண்டும் என்பது ஏகாம்பரத்தின் கனவு

அரசாங்க சேவையில் லிகிதராக வேலை செய்ததினால் பல கச்சேரிகளில் வேலை செய்திருக்கிறார். பல இனமக்களைச் சந்தித்துப் பேசி பழகியுள்ளாh. ;தமிழ், சிங்களம் , ஆங்கிலம் ஆகிய மொழிகளும் பேசுவார். பல தமிழ் சிங்கள முஸ்லீம் ஊர்களில் ; வேலை நிமிர்த்தம் வாழ்ந்தவர் ஏகாம்பரம். பல இனங்களின் வாழ்க்கை முறைகளை நன்கு அறிந்தவர். ஆகவே யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, புத்தளம் , வவுனியா, மன்னார் கண்டி பதுளை, கொழும்பு போன்ற இடங்களில் வாழும் பேச்சு வழக்கு அவரின் கதைகளில் பிரதிபலிக்கும். “பாட்டி சொன்ன கதை” என்று மரபு வழிவந்த கதைகள் பல எழுதியவர். சுஜாதாவின் கதைகளை வாசித்துவிட்டு விஞ்ஞானக் கதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கிருந்தது. ஆனால் வாசகர்கள் அதை விரும்பி வாசிக்க வில்லை.

ஏகாம்பரத்துக்கு அபாரமான கற்பனை வளமுண்டு. முற்போக்கு எழுத்தாளன். விதவைக் கலியாணம் , சீதனம் கொடுத்தல் , சொந்தத்துக்குள் திருமணம் , கலப்புத்திருமணம், மூடநம்பிக்கைள், தீண்டாமை, சாதிவேற்றமை போன்ற சமூகப் பிரச்சனைகளை வைத்து கதைகள் உருவாக்குவதில் கெட்டிக்காரன்.

“துவக்கு பேனாவைவிட பலம் வாயந்தது” என்பது அரசியல் வாதிகளினதும் புரட்சியாளர்களினது எண்ணம். அதற்கு எதிர்மாறானது ஏகாம்பரத்தின் சிந்தனை. ஊடகத்தினதும் எழுத்தாளாகளினது உரிமையைப் பறிப்பது மனித உரிமைக்கு எதிரானது. ஊழல், அரசியல் கொலைகள். இனக்கலவரம் , மனிதக் கடத்தல்கள் போன்றவை மனித உரிமைக்கு எதிரானவை என்பதை ஊடகவியலாளர்கள் சுட்டிக்காடடுவது அவர்களின் உயிருக்கே ஆபத்தான செயல். சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பாவித்து குற்றவாளிகள், அரசியல் ஆதரவோடு தப்பித்துக் கொள்வார்கள்; பல புனைப்பெயர்களில் எழுதிய ஏகாம்பரம் என்ற எழுத்தாளரைப் பற்றியது இந்தக்கதை.

யாழ்ப்பாணத்தில் உள் நாட்டு யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் அனேகம். சிங்கள அரசு தமிழர்களை அடக்கி ஆட்சி செய்ய எண்ணியதே முக்கிய காரணமாகும். பல வருடங்களுக்கு முன்னர், ஒரு கல்லூரி மாணவி இராணுவத்தால் கடத்தப்பட்டு, கற்பழிக்கப் பட்டு கொலை செய்யப்பட்டது நாட்டுக்கே அவமானத்தை கொண்டு வந்தது. அதைப்பற்றி ஏகாம்பரம் பல கட்டுரைகள் எழுதினார். பல அரசியல் கொலைகள் ஒரு பௌத்த நாட்டில் நடக்குறதே என்று விமர்சித்து எழுதினார். பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று எழுதினார். பெண்உரிமையை ஆதரித்து எழுதினார். அவரது பேனா குற்றவாளிகளுக்கு சாட்டையாக அமைந்தது.

எழுத்தாளர் ஏகாம்பரத்தின் எழுத்து கத்தியை விட கூர்மையானது. குமார் , கிருஷ்னா, அவதார். நல்லூரான் போன்ற பல புனைப்பெயர்களில் எழுதித்தள்ளுவார். மனதை தொடும் அளவுக்கு எழுதுவார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து சிறுகதைகள் பல எழுதியுள்ளார். சீதனம் கொடுப்பது, மதமாற்றம் செய்வது, சாதிவேற்றுமை காட்டுவது, தீண்டாமை, ஆண் ஆதிக்கம், அரசு ஊழல் பொன்ற பல தரப்பட்ட சமூகப்பிரச்சனைகளை கருவாகக் கொண்டிருக்கும் அவர் கதைகள். அவரது கதைகளும், கட்டுரைகளும் நகைச்சுவை கலந்தவை. சிந்திக்கத் தூண்டும். கல்கியின் எழுத்துப்பாணியை பின்பற்றுவதாக இருக்கும். மூடநம்பிக்கைளுக்கு சவுக்கடி கொடுப்பார். சுருங்கச் சொல்லப்போனால் ஏகாம்பரம் ஒரு முற்போக்கு எழுத்தாளர். படிக்கும் நாட்களில் கல்லூரி சஞ்சிகையான “விழிப்பு”க்கு ஆசிரியராக கடமையாற்றியவர்.

அவர் “அவதார்” என்ற புனைப்பெயரில் எழுதிய அரசியல் கட்டுரைகள் பலரால் பராட்டப்பட்டது. அவரது புனைப்பெயரானது நிரசிம்ம அவதாரத்தை அடிப்படையாக கொண்டது. விஷ்ணு தர்மத்தை நிலைநாட்ட பல அவதாரங்கள் எடுத்தார். விஷ்ணு, கூர்மையான முனைகள் கொண்ட சுதர்சன சக்கரத்தை வைத்த தர்மத்தின் எதிரிகளை அழித்தார். அதே போல் ஏகாம்பரம் தனது கூர்மையான பேனாவை கொண்டு தர்மத்தை மீறினவர்களை சட்டத்துக்கு காட்டிக்கொடுத்தார்

கொழும்பில் பிரசுரமாகும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராக வரும்படி அவருக்கு அழைப்பு வந்து. அவர் மறுத்துவிட்டார். கட்டுப்பாடில்லாமல சுயாதீனமாக எழுத வேண்டும் என்பது அவரது கொள்கை. “சிவப்புத் தாரகை” என்ற பொதுவுடமை கட்சியின பத்திரிகைக்கு எழுதும்படி இவருக்கு அழைப்பு வந்தது. “நான் பொதுவுடமைவாதியல்ல” என்று சொல்லி மறுத்துவிட்டார்.

இருதடவை அவரது கட்டுரைகளை வாசித்த பயங்கராவாதிகளுடன் தொடர்புள்ள கட்சியின் ஆதரவாளர்கள் அவரை கொலை செய்ய முயற்சித்தனர். முடியவில்லை. ஏகாம்பரத்தின் சக ஊடகவியலாளரும் பிபிசி ரிப்போர்டருமான ஜெயராஜன் என்பவர்; அக்கட்சியினால் கொலை செய்யப்பட்டார். தங்கள் கட்சிக்கு தேர்தலில் வெற்றி கிட்டாமல் போனதுக்கு ராஜனின் கட்டுரைகள் தான் காரணம் என்பது அவர்கள் கருத்து. ராஜனை கொலை செய்தவர் யார் என்பதை ஆதாரத்துடன் காட்டிக் கொடுத்தார் ஏகாம்பரம். பல மொழிகள் பேசும் ஊடகவியலாளர்கள் அவருக்கு ஆதரவு வழங்கினர்.

தேர்தல் நடப்பதுக்கு இரு கிழமைகளுக்கு முன்னர் அவர் எழுதிய கட்டுரை வாக்காளர்களைச் சிந்திக்க வைத்தது. மனித உரிமை மீறல்களை மீறிய கட்சி ஒதுக்கப்பட்டது. தன்னை கொலை செய்ய அக்கட்சியானது இரு சண்டியர்களான கொட்டடி மணியத்தையும், சரசாலை சண்முகத்தையும் கூலிக்கு அமர்ததியுள்ளார்கள் என ஏகாம்பரம் அறிந்தார். அவர்களுக்குப் பொலீசின் ஆதரவு இருந்ததை அறிந்த ஏகாம்பரம் தன் உயிருக்கு ஊரில் இருந்தால் ஆபத்து என உணர்ந்தார்.

அவரோடு ஒன்றாகப் படித்த பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஒரு நாள் எகாம்பரத்திடம் “ சினேகிதா உன் உயிரை எடுக்க பல அரசியல் வாதிகள் சமயம் பார்த்துக்கோண்டு இருக்கிறார்கள். மேலும் நீ இலங்கையில் வாழ்வது உசிதம் இல்லை வெளிநாட்டுக்குப் போய்விடு. இங்கு இப்போ ஊடகவியலார்களை குறிவைக்கிறார்கள்” என்றார். முதலில் ஏகாம்பரத்துக்கு; அரசியல் வாதிகளுக்கு பயந்து ஓட விரும்பவில்லை. காலம் அவருக்கு உதவியது. அவர் கட்டுரைகளை வாசித்து வந்த ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி தான் திருச்சியில் நடத்தும் பத்திரிகைக்கு உதவி ஆசிரியராக வரும்படி கேட்டதினால் அவர் உதவியுடன் தமிழ்நாட்டுக்குப் புலம் பெயர்ந்தார்.

அவரை அனேக காலம் சந்திக்காத நான் எதிப்பாராதவாறு டொரன்றோவில் இடம் பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் ஒன்றில் சந்திக்க நேரிட்டது. அவ்விழாவில் அவரும் ஒரு பேச்சாளர். பல பிரச்சனைகளை சந்தித்தாலோ என்னவோ அவர் தலை நரைத்துவிட்டது.
“என்ன ஏகாம்பரம் நான் யார் தெரியுமா? சிரித்தபடி கேட்டேன்.

“ நான் உங்களை மறக்க முடியுமா.? உங்கள் சிரிப்பு, உங்களை காட்டிகொடுத்துவிட்டதே நீங்கள் கொம்பியூட்டர் என்ஜினியர் இந்திரன் தானே”.

“நல்லது இவ்வளவு வருடங்கள் போயும் நீர் என்னை மறக்கவில்லை. எப்போ கனடாவுக்கு நீர் வந்தனீர். இப்பவும் எழுதுகிறீரா. நான் அப்பவே உமது ரசிகன்” என்று கேள்விக் கணையை அவர் மேல் தொடுத்தேன்.

அவர் சிரித்துவிட்டு ” எழுதக் கூடியவர் வாழ்ந்தால் தான் பேனாவால் எழுதமுடியும். நான் இப்போது கனடா வாழ் சில தமிழ் இளைஞர்களின் உதவியோடு தமிழ் மக்ளுக்கு அரசியலில் விழிப்பை ஏற்படுத்த “விழிப்பு” என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை; நடத்தி வருகிறேன்”, என்றார் ஏகாம்பரம்.

“அப்படியா. தொடர்ந்து எழுதும். உமது பத்திரிகைக்கு எதாவது நிதி உதவி தேவையானால் என்னைக் கேளும். எனக்குத் அறிமுகமான பல வியாபாரிகள் உமது பத்திரிகைக்கு விளம்பரங்கள் தரத் தயாராக இருக்கிறார்கள். அவர்களை உமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். ஒரு எழுத்தாளனுக்கு தொழில் நுட்ப அறிவு அவனது ஆக்கங்களுக்கு பெரிதும் உதவும். தொழில் நுட்பம், உமது பத்திரிகையை உலகில் பல தேசங்களில் வாழும் தமிழர்கள் வாசிக்கப் பெரிதும் உதவும். அதனால் உமது பத்திரிகையை ஒன் லைனில் வாசிக்க வழி செய்யலாம். அதன் மூலம் பிரபல்யமடையும்” என்றேன் நான்.

“நன்றி ஐயா. உங்களைப் போல பல வாசகர்கள் இருந்தால் எழுத்தளர்களான எங்களுக்குத் தொடர்ந்து எழுத உதவும்” என்றார் ஏகாம்பரம்.

“நான் ஒரு அனுபவம் வாய்ந்த சொப்ட்வெயர் என்ஜினியர் . இணையத்தளத்தில் உமது பத்திரிகைகையை வெளயிட தேவையான உதவிகளை என்னிடம’; தயங்காமல் கேளும் என்று கூறி என் பிஸ்னஸ் கார்டை கொடுத்து விட்டு அவரிடமிருந்து விடை பெற்றேன்.



******

எழுதியவர் : (பொன் குலேந்திரன். – கனடா) (20-Oct-16, 2:18 am)
பார்வை : 259

மேலே