*** வறுமையின் வசீகரம் ***

வாழ்க்கையின் வாசலில்
தலைவிரித்தாடும் வறுமையில்
வருடம் ஒரு முறை
மாற்ற முடியாத தென்னோலை மாளிகைக்குள்
இருந்து வானம் பார்த்த ஞாபகம்...

என்வீட்டு மாளிகைக்கூரை
கறையானுக்கு உணவளிக்கும்,
அதைப் பார்த்து என் குடல்கள்
தன்னைத்தானே கடிக்கும்.

ஒரு நேரப் பசிபோக்க
நான்காண்டு மரவள்ளி தேடி
ஒருநாள்பொழுது அலைவார் என் அப்பா...
இலைகுழைக் கறிதேடி
காடு மேடு அலைவார் என் அம்மா.

பாதி அவிர்ந்த மரவள்ளியை
பல்லால் நருவி
பனையோலைப் பாயில்
பசியில் சுருளும் என் சகோதரார்கள்.


ஈரத்துணியை வயிற்றில் போட்டு
கலர்கனவுகளோடு
கறுப்பு,வெள்ளை கதை சொல்லி
தூங்க வைக்கும் என் பாட்டி.

ஓலைகள் பறந்து
ஈர்க்குகளால் பின்னப் பட்டகூரையில்
சொல்ல முடியாமல்
ஆயிரம் இயற்கைக் காற்சிகள்..
வின்னைத்தொட விரையும் மேகங்கள்,
கண்ணடித்து அழைக்கும் நட்சத்திரங்கள்,
ஆகாயத்தில் உலாவும் விமானங்கள்,
பறந்து சிரிக்கும் மின்மினிகள்,
என எத்தனை காட்சிகள்
என் கூரைமேய்ந்த மொட்டை மாடிக்குள்.

தூறல் மழை கண்டால்
வீட்டுச் சுவர் மட்டும் தன்னாலே நடுங்கும்.
கோட்டும் மழையில்
ஒதுங்க இடம் தேடி
அம்மாவின் முந்தானையில் பிள்ளைகள் நாங்கள்
ஒரு கை தலைவைத்து
மறுகையில் சுளகு பிடித்து
தலைநனையாமல் தன் தலைநனைத்து
கண்ணீர் வடிக்கும் அம்மாவுக்கு
கண்துடைக்க கையின்றி
ஆறுதல் சொல்லும் அப்பாவின் இளகிய குரல்.

சோக நிலை பார்க்க முடியாமல்
கண்கலங்கும் வீட்டுச் சுவர்
தானாகக் கரைந்து தலைசாயும்,
எங்கள் தலைவிழ...........
இருகைகளாலும் தடுத்து முட்டுக் கொடுத்தபடி
மழை ஓயிம்வரை என் அப்பா.....

இததனை கொடுமை மத்தியிலும்
மாடாய் உழைப்பார் என் அப்பா
மாடி வீட்டு மேலிருந்து
பாத்து நகைப்பார் உறவினர்கள்.
ஒரு வேளை உணவுகூட
உண்ணக் கோடுக்காத கல் நெஞ்சம் கொண்டவர்கள்,
அவர்கள்தான் உலவாடும் பிணங்கள்.
மனம் விடுவதில்லை அவர்களை எடுத்துச் சொல்லுவதற்கு......

இத்தனை வாழ்க்கை மத்தியிலும்
கஸ்ரத்தின் வாட்டத்திலும்
உடல் நொந்து எங்களை
கல்விக்கடலில் நீந்தவிட்டு
கரை காண காத்திருக்கும் பெற்றோர்...

நீந்த முடியாமல் நான் நடுக்கடலில் தத்தளிக்க
நண்பனின் நல்லுள்ளம்
ஆழக் கடல்தாண்டி விமானம் ஏற்றி விட

வெளிநாட்டு நடப்புக்கள்,
வியர்வை சிந்தும் உழைப்புக்கள்,
வலிகொடுக்கும் இடுப்பு.
ஐயோ..!
அங்கும் எத்தனை கொடுமைகள்
சொல்வதெப்படி.. ..........................?
பாலைவனத்து றோஜாவாய்
தனிமையில் தவிக்கையில்...

பெற்ற முகம் காண ஆசை,
ஒன்றாய் கதை பேச ஆசை,
தாய்மடி உறங்க ஆசை,
தங்கையோடு தனக ஆசை,
அம்மாவின் சுவையான சாப்பாட்டிற்கு ஆசை,
அப்பாவின் கரங்கள் தலை தடவிவிட ஆசை,
உள்ளூரில் நானும் உலா வர ஆசை,
நண்பர்கூட்டத்தோடு நடை பழக ஆசை,
நகைச்சுவையாய்ப் பேசி நடிக்கத்தான் ஆசை,
முடியல்லையே இத்தனைக்கும்,
தனித்துவிட்டேன் தனிமரமாய்,
இருந்தும்,
சோலையாகும் வரை காத்திருப்பேன்,
சொந்தங்களை நான் காண.............

எழுதியவர் : கமல்ராஜ் (2-Jul-11, 11:19 am)
பார்வை : 429

மேலே