உரிமை கொண்டாடும் நட்பு 555

தோழியே...

என் காதலியின்
பெயரை மறுத்து...

அவளிடம் நான் கழித்த நாட்களை
மட்டும் கேட்டு ரசிக்கிறாய்...

உன்னை பார்க்காமல் நான்
இருக்கும் நாட்களில்...

என்னிடம் சண்டைபோடுகிறாய்...

அவன் அழைக்கும் இடங்கள்
போகும் நிகழ்ச்சிகள்...

என்னிடம் அனுமதி
கேட்கிறாய்...

நான் எங்கேனும் சென்றுவந்தால்
உரிமையும் ஓடிவந்து கேட்கிறாய்...

யாரை பார்க்க
போனாய் என்று...

தனிமையில் அமைதியை
ரசிக்கும் நேரங்களில்...

முகம்பிடித்து உனக்குள் என்ன
சோகம் என்கிறாய்...

நானும் கேட்டேன்
நீ யாரென்று...

புன்னகையோடு சொன்னாய்
நீ என் தோழி என்று.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (20-Oct-16, 7:44 pm)
பார்வை : 386

மேலே