தங்கை
தங்கை
========
எனக்கான
உணவை அவள்
திருடி உண்பால்,
என் கண்ணில் கோபம்....
எனக்கான
இடத்தை அவள்
பிடித்துக்கொள்வாள்,
என் கண்ணில் கோபம்....
எனக்கான
உரிமையை அவள்
எடுத்துக்கொள்வாள்,
என் கண்ணில் கோபம்...
இன்றோ
அவள் போனால்
மணமாகி,
ஏனோ
என் கண்ணில் கண்ணீர்...
மனோஜ்