தனி பிறவி
தனி பிறவி
==========
உயிர் கொடுத்தது யார்
என்று அறியாமல் உயிர்
வாழும் ஜீவன்....
உணவளித்த உள்ளம்
அனைத்தும் தாய்
என கொண்டாடும் மனம்...
ஜாதி மத பேதம்
இல்லாமல் குணம்
மட்டும் பார்க்கும் உயிர்....
இவ்வுலகில் தனியே
விடப்பட்டு தனக்காக
போராடும் உள்ளம்....
யார் சொன்னார்கள்
இவர்கள் அனாதை என்று
தாய் தந்தை இல்லாமல்
பிறந்த தனிபிறவி இவர்கள்...
மனோஜ்..