கோபம்

கோபம்
=======

உன் கண்ணை மறைத்து
எதிர் இருக்கும் உன் வாழ்வை
அழிக்கும்...

உன் உறவை பழிக்கவைத்து
தனிமரம்மாய் உனை
நிற்க வைக்கும்...

மனதை வதைத்து, உன்
ஆயுள் குறைத்து, வாழ்வை
நரகமாக்கும்..

அன்பு வைத்த அனைவரையும்
உனை வெறுக்க வைத்து,
மறக்க வைக்கும்....

நாம் என்று இருந்த உன்
மனம் நான் என்று சுயநல
மிருகமாகும்....

கோபம் என்ற எதிரியை
முலையிலையே அடக்கி
ஆள்பவன் மட்டும்தான்
நிலைக்கின்றான், அதில்
தோற்பவன் வீழ்கின்றான்...

மனோஜ்..

எழுதியவர் : மனோஜ் (21-Oct-16, 3:28 pm)
Tanglish : kopam
பார்வை : 1531

சிறந்த கவிதைகள்

மேலே