காதல்

காதல்
கணிப்பொறியில் செய்த
தீப்பொறி இவளோ
ஒலைச்சுவடியில் தீட்டிய
ஒவியம் இவாளோ

இவள் பூப்படைந்ததும்
நாணத்தில் மொட்டுக்கள்
பூக்க மறுக்கின்றது

கமல நீர் துளிகள் போல்
உன் முகப்பருக்கள் - அதில்
தாரகைகள் மின்னுகிறது

நூதன முறையில்
நுட்பமாக நுழைக்கிறேன்
உன் நினைவுக்குள்
இது நிற்கும் உன் முன்னே
எப்பொழுதும்

நம் காதல் கட்டுரையில்
முன்னுரையிலே முத்தம்
தெறிக்க விழைக்கிறேன்
இருப்பினும் தள்ளி வைக்கிறேன்
காதல் சுவாரசியத்திற்கு

நம் காதலின் முதல்
ஸ்பரிசமே முத்தமாகும்
ஏன்னெனில் காதலின் அழல்
உச்சம் எட்டியது

நம் காதல் கட்டுரை
தொடு வானம் போல்
தொடரும்.......

எழுதியவர் : கமலக்கண்ணன் (22-Oct-16, 12:30 am)
Tanglish : kaadhal
பார்வை : 109

மேலே