கமலக்கண்ணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கமலக்கண்ணன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 07-Feb-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 811 |
புள்ளி | : 171 |
காலையில் எழுவது என் வழக்கம்
எழுந்த பின் எழுந்துவது என் பழக்கம்
எழுவதும் எழுந்துவதும் நின்று விடும் - ஒரு நாள்
இவ்விரண்டும் நிலைந்து விடும் - பின் நாள்
நிலைந்து விடும் என்பதானலே நிற்க்கின்றேன் - இந்நாள்
பேதை அவள் போதை
மதுக் கோப்பைகள் நிரம்ப வில்லை
பின்னிருந்து அணைப்பது
போல் கனவு கண்டேன்
கண்விழித்ததும்
அவளின் சுயம்வர வரிசையில்
வெகு பின்னிருந்தேன்
வில் முறிக்கவும்
இளந்தாரிக்கல் தூக்கவும்
தேவை அற்று
அவள் கண் சமிக்ஞையே
இறுதி உரை
ஏனோ அவநம்பிக்கை அவள் மீது
உண்மையில் என் மீதே
தருமி போல் தவிக்கிறேன்
ஈசானி மூலையில் ஈசன் வருவானா?
என் முறை வந்தனம்
புவிமிசை ஓர் அதிசயம்
நிகழ்ந்தது
அவள் கண் சமிக்ஞை
சுயவரம் வரம் வரம்
தொடரும் மறுதினம்
பிறகு ஏன் தாமதம்
எம் ஊரில் ஏது மதுவிலக்கு
கண்ணதாசனின் தொடங்கி
தனுஷ் வரை நீள்கிறது
மது கிண்ணங்கள் எண்ணிக்கை….
கோடை மழையில்
குளிர் காயும்
சீட்டு குருவிகள் நாம்
சிறு மழையே ஆனாலும்
ஒவ்வொரு துளியும்
மறக்க இயல
மழை துளிகளே......
சேமிப்பு
உன்னிடம்
பேச நிமிடங்களை
சேகரிக்கிறேன்
என் வாழ்வின்
சிறந்த சேமிப்பே
இதுவே
என நினைக்கிறேன்....
மங்கிய மின்னொளியில்
உன் முகமும் என் முகமும்
அருகருகே....
அவள்
நேற்றுவரை மனதில்
ஏதோ ஏதோ ஏதோ
இன்று வைகறையில்
அவசரக்குடுக்கைகுள்
ஒர் அன்புநிலை
குடுக்கைகுள்
அவள் இருப்பது
யார் அறிவார்....
சோம்பேறி
ஒடாத
கடிக்காரம்
சிரிக்கிறது
பாரதி கண்ட
புதுமைப் பெண்ணே...
பாரதிதாசன் பெற்றெடுத்த
புரட்சிக் கண்ணே - எங்கே
மறந்துபோனாய் உன் வீரத்தை?
இல் - குடி
கூட்டுப்புழுவாய்
சுருங்கிவிட்டாய் - உன்
தொல் - குடி
வரலாற்றை நீ அறிவாயா?
வில்லெடுத்து வேட்டைக்கு
முன்னின்றவள் பெண்!
வேட்டையாடும் விலங்கையே
வேட்டையில் இரையாக்கி
எடுத்து வந்தவள் பெண்!
பாறையை உருக்கும்
பெருமழையாய் இருந்தாலென்ன...
உதிரம் உறையும்
பனிக்காற்றாய் இருந்தாலென்ன...
எதற்க்கும் அஞ்சியதில்லை பெண்!
வேட்டைக்களம் முடித்து
விதைவிதைக்க வயற்களம்
அமைத்தவள் பெண்!
தன் விழிக்குடம் தழும்பினாலும்
பனிக்குடம் தளும்பாமல்
சிசுவை ஈன்றவள் பெண்!
எப்படி மறந
திருமணம்
பெண் கவர் விந்தை இல்லா
மனிதன் நான்
எனினும் விந்தை நிகழ்ந்தது
ஒப்புதல் வாக்குமூலம்
நிலவை கடத்தியவன் நான்தான்
இப்படிக்கு
சூரியன்
மீனவர்கள்
கடலில் களவாடும் நல்லவர்கள்.
சுயநலம்
பார்வை இல்லதாவன் கண்ணிரில்
பெளர்ணமி நிலவை ரசிக்கிறோம்
எதற்காக ?
பிறந்தோம் எதற்காக ?
கல்வி கற்றோம் காசுக்காக
உழைத்தோம் உணவுக்காக
திருமணம் பிள்ளைக்காக
உணவு உடலுக்காக
உடல் நோய்க்காக
நோய் மருந்துக்காக
மருந்து மரணத்துகாக
மரணம் எதற்காக ?
என்றும்,
கமலக்கண்ணன்