சுயவரம்
பேதை அவள் போதை
மதுக் கோப்பைகள் நிரம்ப வில்லை
பின்னிருந்து அணைப்பது
போல் கனவு கண்டேன்
கண்விழித்ததும்
அவளின் சுயம்வர வரிசையில்
வெகு பின்னிருந்தேன்
வில் முறிக்கவும்
இளந்தாரிக்கல் தூக்கவும்
தேவை அற்று
அவள் கண் சமிக்ஞையே
இறுதி உரை
ஏனோ அவநம்பிக்கை அவள் மீது
உண்மையில் என் மீதே
தருமி போல் தவிக்கிறேன்
ஈசானி மூலையில் ஈசன் வருவானா?
என் முறை வந்தனம்
புவிமிசை ஓர் அதிசயம்
நிகழ்ந்தது
அவள் கண் சமிக்ஞை
சுயவரம் வரம் வரம்
தொடரும் மறுதினம்
பிறகு ஏன் தாமதம்
எம் ஊரில் ஏது மதுவிலக்கு
கண்ணதாசனின் தொடங்கி
தனுஷ் வரை நீள்கிறது
மது கிண்ணங்கள் எண்ணிக்கை….