ராமு-சோமு உரையாடல் -கலப்படம் இன்றைய வாழ்க்கையில்

ராமு : டேய் சோமு நம்ம வீட்டு பக்கத்துல
புதுசா ஒரு காய்-கனி அங்காடி வந்திருக்குமே
ரொம்ப மலிவா விக்கறாங்களாமே;ஏதாச்சும்
வாங்கி பாதையா ?

சோமு : அண்ணே; அத என் கேக்கறீங்க
முளைக்கீரை ரெண்டு கட்டு பத்து ரூவா னு
வாங்கிட்டு வந்தேன் ; வீட்டுக்கு வந்து
கீரையை கழுவினா, கலர் கலரா தண்ணீ
வந்துட்டே இருந்தது ; ஆப்பிள் பழம்
சிவப்பா பள பள னு இருக்கேனு வாங்கினேன்
வழ வழன்னு ஏதோ எண்ணை தடவி இருக்காம்
எல்லாம் ஷோ அண்ணே ; ஏமாத்தல், கலப்படம் ................


ராமு : இன்று கலப்படம் இல்லாத பொருளும் இல்ல
வாழ்க்கையும் இல்ல போல இருக்கு!
எல்லாம் கலப்படம்...எதிலும் கலப்படம்
உண்மையில் பொய், கலப்படமான அரசியல்
இன்னும் அடுக்கி கிட்டே போகலாம் ......

சோமு : அண்ணே இன்றைய வாழ்க்கையில்
கலப்படம் ஒரு பிரிக்க முடியா
கலவையோ? இன்றைய மனிதன்
கலப்படத்திற்கு அங்கீகாரம் தந்து விட்டான்னு தோணுது அண்ணே !

ராமு : டேய் சோமு நீ ஒரு படிக்காத மேதை டா ... !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Oct-16, 4:22 am)
பார்வை : 132

சிறந்த நகைச்சுவைகள்

மேலே