பொண்ணு பேரு கண்ணா
ஏண்டா தம்பி நீ கல்யாணம் பண்ணிட்டு அமெரிக்கா போனவன் அஞ்சு வருசங் கழிச்சுத்தான் எங்களப் பாக்க வந்திருக்கற. பாப்பா பேரு என்னவோ சொன்ன மறந்து போச்சு. செல்லம் நா உன்னோட பெரிப்பாடா கண்ணு. உம் பேரென்ன சொல்லு.
#######
நேத்ரா
@@@@@@
என்னடா தம்பி பாப்புவுக்கு எதோ அர்த்தம் தெரியாத பேர வச்சிருக்கற?
@@@
இல்லண்ணா. நா அர்த்தம் தெரிஞ்ச பேரத் தான் எம் பொண்ணுக்கு வச்சிருக்கறேன். நேத்ரா- ன்னா கண்கள்-ன்னு அர்த்தம்.
@@!!!
என்னடா சொல்லற? உம் பொண்ணுப் பேரு கண்ணா......!!!!?
அப்ப பாப்பாவுக்கு கண்கள்-ன்னு தமிழ்ப் பேரையே வச்சிருக்கலாமே.
@@@@@
கண்கள்-ன்னு பேரு வச்சா நம்ம தமிழருங்கெல்லாம் சிரிப்பாங்களே.
@@@@@
அப்பிடியா. பெரும்பாலானவங்களுக்கு அர்த்தம் தெரியாத பேரை வச்சாத் தான் மத்தவங்க பாராட்டுவாங்களா?
போடா அறிவு கெட்டவனே. நீ படிச்சும் பதராப் போயிட்டயேடா.
@@""@
இல்லண்ணே, தமிழர்கள்ல 98% பேர் இந்திப் பேருங்கள வைக்கறபோது நாமட்டும்......
@@@@
தாய் தந்தைய மதிக்காத சினிமா ரசிகர்கள் கவர்ச்சி நடிகைங்களக்கூட இதயதெய்வமா ஏத்துக்கறாங்க. நீயும் அந்த ரகமா? டேய் தம்பி நாஞ் சொல்வறத கேளுடா. கண்கள்-ன்னு பேரு வச்சா தமிழர்கள் சிரிப்பாங்கன்னு சொல்லற. பாப்பா பேர கண்மணி-ன்னு மாத்துடா. அப்ப எவஞ் சிரிக்கறாண்ணு பாப்போம்.
@@@@@@
சரி அண்ணே. நீங்க சொல்லற மாதிரியே செய்யறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சரிக்க அல்ல. சிந்திக்க. தாய்மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.