ஜன்னல் நிலா
விழித்திரையை திறந்துவைத்து ;
விடியலிலே வந்து வந்துவிட்டேன் !
வீதியிலே நிற்பதெல்லாம் ;
"ஜன்னல் நிலா வாராயோ" !
"ஜாடை மொழி பேசாயோ" !
"காத்திருக்கும் கண்களுக்கும் ;
காட்சி ஒன்று தாராயோ" !
தூக்கம் மறந்த கண்கள் கூட ;
துள்ளி ஆடி மகிழ்கிறதே !
உறக்கம் தொலைத்த கண்களுமே ;
உறவாட துடிக்கிறதே !
உன் அழகை காணபயந்து ;
ஒளி சுமந்த நிலா கூட ;
ஓடி ஒளிந்து கொள்வதுவும் !
வாடிக்கையாய் போனதாலே ;
வழிதவறி செல்கிறதே !