விழுந்தாலும் விதையாகிடு

விழுந்தாலும் விதையாகிடு
*********************************

விழுகின்ற மழை தான் நதியாகிறது
எரிகின்ற தீபம் தான்
ஒளியாகிறது
கருமேகம் தான் மழையாகிறது
விழுகின்ற மழைத்துளி தான் முத்தாகிறது
உருக்கிய தங்கம் தான்
அங்கத்தின் நகை
ஆதலால்
மனிதா......

விழுந்தாய் எனில்
சோர்ந்து போய் விடாதே
எழுந்து நட...
பிரபஞ்சமே உனது பாதை
வானமே உனது எல்லை...
அகிலமே உனக்கு கூரை...

தடுத்து நிறுத்த இயலா
காட்டாறு நீயடா.....
எழுந்து வேகமாய்
ஓடடா.....


விழுந்தாலும் விதையாகிடு
விதை விண்ணை முட்டட்டும்.....

விழுந்த பழம் தான்
ஈர்ப்பு விசை தந்தது...
எழுந்து நடந்தால்
நண்பா.....
எட்டு திசையும்
உன் அசைவு தான்...

மண்ணுக்குள் புதைந்த புதையலே
நீ
விண்ணுக்கு அடையாளம் ஆகும் நாள்
வெகு தொலைவில் இல்லை.....

விழுந்தாலும் விதையல்லவா நீ.......

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (24-Oct-16, 12:08 am)
பார்வை : 1518

மேலே