என் காதல்

வெற்றுக்காகிதமாய் என் காதலும் பறந்து சென்றதடா காற்றில்
என்மேல் அன்பு இல்லாத உன்னிடம் அன்பு காட்டியது என் தவறா?
பண்பு இல்லாத உன்னிடம் பாசம் காட்டியது என் தவறா ?
கல்லறைக்கு சென்றால் தான் என்னை காதலிப்பாயா?
மரணமேடைக்கு சென்றால் தான் என்னை மணம்முடிப்பாயா?
கண்ட கண்ட இடங்களில் மலரும் காட்டு மலர் அல்லடா காதல் உணர்வுபூர்வமான உள்ளங்களில் மலர்வதுதான்டா உண்மை காதல்!!!
நேசிக்கத் தெரியாத யாசிக்க தெரியாத உனக்கு உண்மைக்காதல் நீ தொடமுடியா தூரம் தான்!!!
தோப்பிலே இருந்தாலும் மரம் தனியாகத்தான் இருக்கும்
நான் எங்கு இருந்தாலும் என் நினைவெல்லாம் உன் நினைவாகத் தான் இருக்கும்!!!
என்றும் என் காதலனாய் வாழ்வாய் நீ என் மனதில்!!!
சி.பிருந்தா
மட்டக்களப்பு