சொல்லத் தெரியாத காதல் வந்தது தோல்வி
நினைவு தெரிந்த நாள் முதல்
அவளை நான் அறிவேன்
கைக்குழந்தையாய், சிறுமியாய்
பின்னர் சிற்பி செதுக்கிய
பொற்சிலைப்போல் என்
கண் எதிரே அழகின்
மொத்த வடிவாய்
சிட்டு குருவிபோல்
ஓடி ஆடி
வீட்டு வேலைகள்
மொத்தம் செய்து
என் அத்தைக்கு
தக்க துணையாய்
இருந்து வந்தாள்
அன்னவளை என்
அதை மகளை
என் காதலியாய்
என்னவளாய் என்றும்
மனதில் நிறுத்தி
வெளியில் சொல்லாமல்
இருந்து வந்தேன்
ஐயகோ என் செய்வேன்
காலம் அது
கோலம் செய்ததே
எங்கிருந்தோ ஒருவன்
டாக்டராய் ஊருக்கு வந்தான்
எப்படியோ என் மாமன்
மனதைப் பிடித்து விட்டான்
அத்தையும் இசைவு தர
என் அத்தை மகளுக்கு
தை மாசம் திருமணம்
முடிவானது
" வரு மீன் வரும்
என்று காத்திருந்த கொக்கு
எங்கிருந்தோ பறந்து வந்து
அந்த மீனை கொத்தி சென்றதாம்
ஒரு பருந்து "
அது போல்
மனதில் பதிந்த
காதலை வெளி படுத்தாமல்
இருந்தேன்
என்னவள் என்று நினைத்தவளை
இழந்தேன்
இதை காதலில் தோல்வி
என்பேனா ,இல்லை
வாழ்க்கையில் தோல்வியுற்றேன்
என்பேனா ?

