விழியே விழியே

விழியே விழியே
உந்தன் வழிமேல் விழியாய்
நானும் வருவேன் ....

இமையே இமையே
உந்தன் இமையும் இமைத்தால்
நானும் நிற்பேன் ....

கணுவே கணுவே
உந்தன் கண்ணில் நீர் வழிந்தால்
நானும் கலங்கி நிற்பேன் ....

கணையே கணையே
உந்தன் கண் தொடுத்தால்
நானும் விழ்ந்திடுவேன் ....

கமமே கமமே
உந்தன் மடியினில்
நானும் பூத்திடுவேன்....

கரமே கரமே
உந்தன் கை கொடுத்தால்
நானும் வாழ்ந்திடுவேன் ....

கவியே கவியே
உந்தன் பாட்டினில்
நானும் இசைத்திருப்பேன் ....

கவினே கவினே
உந்தன் அழகதனில்
நானும் பருவாய் முளைத்திருப்பேன் ....

உயிரே உயிரே
உந்தன் உயிர்துணையாய்
நானும் வர காத்திருப்பேன் ....

எழுதியவர் : கிரிஜா.தி (25-Oct-16, 10:31 am)
Tanglish : vizhiye vizhiye
பார்வை : 160

மேலே