பல விகற்ப இன்னிசை வெண்பா வடக்கில் இருக்கும் ஒருமா நிலத்தில்
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
வடக்கில் இருக்கும் ஒருமா நிலத்தில்
தகப்பன் தலைமைப் பொறுப்பில் இருக்க
மகனை முதல்வரென் றேகூறி தேர்தலில்
பெற்றது மாபெரும்வெற் றி
ஐந்தாண்டு ஆட்சி முடிவதற் குள்ளில்
மகன்கைப் பொறுப்புகள் தந்தை பறிக்க
குடும்பம் நடத்தும் ஒருகட்சிக் குள்ளில்
பிளவிற் கறிகுறிதோன் ற
பல்லாண் டுகளாயோர் கட்சியிலி ருந்த
தலைவி ஒருவர் நிகழ்வுகள் கண்டதும்
தானிருந்த கட்சிவி டுத்திணைந்தார் தாமரை
அங்கு மலருமென் று
தன்வுயர் வொன்றே குறியெனக் கொண்டு
இவர்போல் பலருமி ருக்க பொதுமக்கள்
மேன்மை கருதி உழைக்கிற கட்சித்
தலைவன் உலகிலுள னோ
25-0-2016

