காதல் குளிர் காய்வோம்

முழுநிலவும் தோற்று போகும்
அவள் அழகில்...!
காதல் அழகும்
கடந்து செல்லும் அவள் விழியில்..!

என் அருகில் வந்த நிலவு
என்னோடு உயிரில் கலந்து உலவு..!
அனுமதியின்றி நடந்தது காதல் களவு
கொட்டிக்கடக்குது என் மனதில்அவள் அழகு...!

நான்கு இதழும் மூச்சு பட்டு மலருதே
ஆழமான இதயத்தில் காதல் நிலவுதே...!
நீயும் நானும் ஓரிடத்தில்
காதல் குளிர் காய்வோம் நிலவிடத்தில்...!
===============================
பிரியமுடன்,
ஜ.கு.பாலாஜி.

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (25-Oct-16, 11:46 am)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 250

மேலே