பெண்
![](https://eluthu.com/images/loading.gif)
என்னுடைய குதுகலங்கள்
யாவும்
மண்ணில் விழுந்த மழைத்
துளியாய்
மறைந்தேப் போகும்
என்னுள் நான் விதைக்கும்
விதைகள் யாவும்
கருகிப்போகும் ஆயினும்
என் சுற்றத்தின் விதைப்பு
தழைத்தோங்கும்
எனக்கென நான் வாழ
முடியாது
ஆனாலும் என் வாழ்க்கை
நகர்தல் இருக்கும்
#பிறர்க்காக
இது காலச்
சக்கரத்தின் சுழற்ச்சியாய்
மீண்டும் ஒரு அத்தியாயம்
துவங்கும் என் மூலம்
இனவிருத்தி என்ற பெயரில்
சுயம் இன்றி வாழ!
நான் இம்மண்ணின்
#பெண்!
#sof_sekar