கனவைத் தொலைத்தவள்
என்ன எழுதுவதென்றே தெரியவில்லை
உன் முகம் பார்த்து ரசித்த என்னால்!
உறக்குமும் தொலைந்து போனது
உன் முகம் மட்டும் என் கண்ணில் ஆடுது
என்றுனைக் காண்பேன் தெரியவில்லை.
கனவிலும் உனைநான் பார்ப்பதற்கு
வழியேதும் தேரியாமல் தவிக்கின்றேன்!
காதல் வலியால் நான் துடிக்க
எங்கு நீ மறைந்து வாழ்கின்றாய்?
மின்னல் போல தோன்றினாய்
மின்னலாய் மறைந்து போனாயே!
என் கனவையும் தொலைக்க வைத்தவனே,
பெண் பாவம் உன்மேல் இறங்குதடா
அடுத்த பிறவியில் உன் காதலனாய்
உனைத் துடிக்க வைத்து
நான் ரசித்திடவா
எங்கோ சென்று மறைந்து கொண்டாய்?