உறைபணியே அவனிடம் உரைப்பாயா

உறைபணியே அவனிடம் உரைப்பாயா...
உள்ளம் உருகுவதை அவனிடம் கதைப்பாயா..
உன் முத்தமழை காணாமல்
தேகம் தார்ப் பாலைவனம் ஆனதடா..

உறக்கம் இறக்கம் காட்டாது,
கோட்சேவாய் கொல்லுதடா...
இளமை உயிர் திறக்காமல் ,
ஹார்மோனும் பயங்கரவாதம் காட்டுதடா..!

உதடுகள் உன் உதட்டின் சவாரிக் கேட்டு
பற்களும் கடிவாளம் போடுதடா ..!.
உன் பத்து விரலின் பக்குமின்றி,
என் கட்டிலில் தலையணைகள்......பூனையாய் தூங்குதடா !

உன் கோபத்தை கரைத்து,
என் தாபத்தில் அனுதாபம் கொண்டு,
என்னில் பிரதாபம் கொள்ள கண்ணா வாடா....!.

உறைபணியே அவனிடம் உரைப்பாயா...
உள்ளம் உருகுவதை அவனிடம் கதைப்பாயா..
உன் முத்தமழை காணாமல்
தேகம் தார்ப் பாலைவனம் ஆனதடா..

எழுதியவர் : பாரதி பறவை (26-Oct-16, 1:36 pm)
பார்வை : 92

மேலே