தாய்மை

சுமக்க முடியா

பாரம் என்று

கருவாய்,உன்னை

சுமக்கையில்

நினைக்கவில்லை,

பிரசவிக்கையில்

ஏற்பட்ட

மரனவலி கூட,

மறந்துப் போனது,

பிரசவித்த பின்,

உன்னை வருடிய,

அந்த ஸ்பரிசத்தில்!

வலிகள்,எல்லாம்

பஞ்சாய் பறந்தது,

உன்னை அள்ளி

அனைக்கையில்,

சுமந்தது கூட

சுகமாய்,இதுதான்

தாய்மையோ?.#sof #சேகர்

எழுதியவர் : #Sof #sekar (26-Oct-16, 6:31 pm)
பார்வை : 441

மேலே