ஆசைப் படகு

ஆசைப் படகு உலக நதியில்
ஆடி ஆடிச் செல்கிறதே
அடுத்த அடுத்த அடிகள் நகர்ந்து
கரையைக் காண விரைகிறதே
சின்ன சின்ன காற்றில் கூட
ஆசை கலைந்து போகிறதே
தண்ணீர் தன் வழியை மாற்ற
ஆசை யோசனை செய்கிறதே
ஆசை ஒன்று நிறைவேறக் கண்டு
மகிழ்ச்சியில் உள்ளம் குதிக்கிறதே
ஆசைப் பட்ட படியே ஆடி
உலகை வெல்லத் துடிக்கிறதே
சின்ன மனிதன் ஆசை அனைத்தும்
கடவுள் நிறை வேற்றட்டும்
பாவம் செய்யும் அவனின் மனதை
மன்னித்தே அவர் விட்டிடட்டும்
அடுத்த அடுத்த ஆசைக் கதவை
திறக்கும் சாவி செயல்களே
எடுத்து வைக்கும் அடிகள் அனைத்தும்
சிறக்க ஆசை நடக்குமே