இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

வந்தே விட்டது தீபாவளி
போனால் நல்லது மனதின் வலி
ராக்கெட் விட்டதும் ஞாபகம் வந்தது
வெடியால் சூடுபட்டதும் கண்ணீர் தந்தது

சென்ற வருடம் சென்றுவிட்ட தீபாவளி
இதோ வந்துவிட்டது நம் இல்லம் தேடி
புத்தாடை பளபளக்க பட்சணங்கள் மணமணக்க‌
சந்தோசம் சிறுவயதினருக்கு அதிகமதிகமாய் தந்துவிட்டது

கவிஞர்க்கு சிலசமயம் சிவகாசி எழுத்தில் வரும்
சுற்றுச்சூழல் நலம்கெடுமென சிலருக்கு உணர்வு வரும்
ஏழைக்கு எப்போதும் மகிழ்ச்சி தராதே தீபாவளி
எல்லோருக்கும் மகிழ்ந்திருக்க முடிந்தவரை கைகொடுப்போம்

வாங்கும் பட்டாசில் சிலதை விட்டு
நல்லத்துணிமணிகள் சிலருக்கு கொடுப்போம்
வெட்டிச்செலவில் சிலதை விட்டு
உணவில்லாருக்கு உணவை அளிப்போம்

பகிர்ந்து வாழ்தலே மனிதரில் சிறப்பு
தெரியாவிட்டால் சிறு உயிர்களிடமிருந்து கற்றுக்கொள்வோம்
பிறந்துவிட்டோம் என்ன சாதித்தோம் என நினைப்பதைவிட்டு
சிலருக்கு ஒரு உதவியாவது செய்தோமென்பது திருப்தியே...

நல்ல எண்ணங்களை மனங்களில் விதைத்து
தீபாவளி நாளில் மனமகிழ்வை அறுவடை செய்வோம்
இனிய பொன்னாளில் அன்பான மகிழ்வான‌
இனிப்பான உள்ளம் பொங்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-Oct-16, 8:47 pm)
பார்வை : 373

மேலே