போர்க்களத்தில் மண்டோதரி பல விகற்ப இன்னிசை வெண்பா ராவணனை யுத்தத்தில் தோற்கடித்து போர்க்களத்தில்
போர்க்களத்தில் மண்டோதரி ..
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
ராவணனை யுத்தத்தில் தோற்கடித்து போர்க்களத்தில்
ஓரிடத்தில் நின்றிருக்க அங்குவந்த பெண்னொருவள்
மேனிநிழல் பொற்பாதம் தீண்டும்முன் பாதங்கள்
சற்றகற்ற ராமபி ரான்
வெண்ணிலவு நேரத்தில் போர்க்களத்தில் வந்துநிற்கும்
பெண்ணேநீ யாரென்று சொல்லென்றார் ராமபிரான்
என்பதியை வெல்வதற்கு யாருமில்லை என்றிருந்தேன்
என்பதியை வென்றுவிட்டீ ரே
லங்கேஸ் வரனிடத்தில் இல்லாத பண்பொன்று
உம்மிடத்தில் உள்ளதனால் என்பதியை போர்க்களத்தில்
தோற்கடித்து வென்றுவிட்டீர். வாழ்விழந்து நிற்குமெனை
நாடி வரவிலை யே
மன்னவன்ம னைவியே யென்றாலும் போரிட்டு
வென்றதனால் என்னைநீராட் கொள்ள விழைவீரோ
என்றெண்ணி வந்துநிற்க என்நிழல்வும் மேல்படுதல்
பாவமென் றேநினைத் தீர்
உயரியதோர் நற்பண்பு உம்னிடத்தில் உள்ளதனால்
என்கணவன் கும்பிட்ட ஈசனுக்கும் மேலானீர்
என்றுரைக்கப் புன்னகைத்து விஸ்வரூபம் காண்பித்தார்
ராமபிரான் மண்டோ தரிக்கு
27-10-2016