காதல் வலி

தேடித் தேடி ரசிக்கும்
உன் கண்களுக்கு
அருகிலிருக்கும் என்னைத்
தொியாமலேயே போய்விட்டது

என் உயிரை வைத்துள்ளேன்
உன்னிடத்தில் வாழ்நாள் அடமானம்
நீ வெறுத்தால் பாவம் அது
எங்கு போய் வாழும்

என் மனம் உன்னிடத்திலே
விட்டுக்கொடுக்க தயாராக உள்ளது
நீயே இனி என் வாழ்வென
தன்னைத் தயாா்படுத்திக் கொண்டது

எழுதியவர் : கோ.ஜெயமாலினி (28-Oct-16, 6:18 am)
Tanglish : kaadhal vali
பார்வை : 886

மேலே