என்றேன்றும் காதலேஇந்நாளிலே

என்றேன்றும் காதலே!
இந்நாளிலே!
****************************
காதலே என் காதலே 
கனவாய் இருந்தாய் அந்நாளிலே! 

கனவில் நிலவாய் வந்தாய் 
கவர்ந்தாய் ஏனோ மறைந்தாய் 
முனைப்பாய்ப் பிணைப்பாய் நாளும் 
நினைவாய் தவமாய்த் தேடியே 

துளியாய் விதையாய் விழுந்தாய் 
அமிழ்தாய் என்னுள் நுழைந்தாய் 
முத்தாய் விளைந்தாய் முதிர்ந்தாய் 
சத்தாய் நிறைந்தாய் நெஞ்சிலே! 

ஒளிர்ந்தாய் மணியாய்ப் பதிந்தாய் 
கிளர்ந்தாய் வளர்ந்தாய் சோதியாய்
மருவாய் மலராய் மலர்ந்தாய் 
காய்த்தாய் கனிந்தாய் மனதிலே !

ஊணில் உணர்வாய் உறைந்தாய் 
உயிரில் உயிராய் கலந்தாய் 
கருவாய் உருவாய் திருவாய் 
பருத்தாய் தழைத்தாய் படர்ந்தாய் 
இந்நாளிலே! 

துளியாய்ப் பிரிவே எனினும் 
துடிப்பாய் துவள்வாய் தவிப்பாய் 
கசிவாய் கரைவாய் பாவாய் 
கடிதாய் துடுப்பாய் தருவாய் 
கரமே.! 

செவ்வாய் திறப்பாய் கனிவாய் 
தருவாய் பெறுவாய் களிப்பாய் 
இதமாய் இதயம் இணையும் 
இன்பம் பொங்கும் புனலாய்!

காதலே என் காதலே !
என்றேன்றும் காதலே!
இந்நாளிலே!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (28-Oct-16, 1:46 pm)
பார்வை : 109

மேலே