காதலின் ஏக்கம்

காதலின் ஏக்கம்
******************
மலரைத் தேடிய வண்டு
அந்த
மலரில் அமர்வது போல
நீ......
என் மனதினுள் வருகிறாய்
வண்டாக.....
ஒளிக்கதிரைப்போல
ஆதவனுடைய
இதயம் சிரிக்கிறது அவன்
முகமும் சிரிக்கிறது
நீயும் சிரிக்கிறாய் .
==================
துக்கத்தில் உள்ளம்
குமுறுகின்ற
அந்த தொடிப்பொழுதில்
உன்னைத்தான் நினைப்பேன்
அணைந்துவிடும்.....
மறைந்துவிடும்
ஆதவனைக் கண்ட பனியைப் போல
=====================
உலகம் கீழிறங்குகிறது
இராக் பொழுது கரைகிறது
ஆயிரம்
தடவைகள்
நீ
என் இதய இடுக்கினுள் வந்து
போகிறார்
நினைவாக
என்றும் நீங்காத ஞாபகச்
சின்னமாய்
=====================
விழி திறவாமல் இருக்கிறேன்
ஏன் தெரியுமா............?????
கனவிலாவது நீ
என்னை விட்டு
பிரியக்கூடாது எனபதற்காகத்தான்
அன்பே .........