ஞான தீபாவளி
நம் மனதை எண்ணம் எனும் எண்ணெயில் ஆழ்த்தி,
தீக்குணம் எனும் நரகாசுரனை அழித்து,
நற்குணங்கள் எனும் தீபங்கள் ஏற்றி,
மகிழ்வு தரும் இன்சொல் எனும் பட்டாசு வெடித்து,
நற்செயல்களால் நமக்கும் பிறர்க்கும்
நன்மை எனும் இனிமை தந்து,
தினம்தினம் கொண்டாடுவோம்
நமக்குள் நாமே ஞான தீபாவளி !