காதல் தீபாவளி

நீ வீசி போன புன்னகை
ஆயிரம் மத்தாப்பாய் மின்னுதடி...
நீ வந்து போன இடத்தில்
சங்கு சக்கரமாய் மனசு சுத்துதடி ....
நீ சிதறி போன ஒரு பார்வையில்
என் இதயம் பூந்தோட்டியாய் பூக்குதடி ....
நீ பேசி போன வார்த்தையில்
சர வெடி வெடிக்குதடி ....
நீ மொழிந்த காதலதில்
என் காதல் தீபாவளி வந்ததடி....
கவியுடன்,
கிரிஜா.தி