காதல் தமிழ்

என்னவளே !
இயல் தமிழைக்
கற்றுக் கொண்டேன்
உன் இதழ் பார்த்து !
இசைத் தமிழைக்
கற்றுக் கொண்டேன்
உன் இடை பார்த்து !
நாடகத் தமிழைக்
கற்றுக் கொண்டேன்
உன் நடை பார்த்து !
முத்தமிழும் எனக்கு
கற்றுகற்றுத் தந்த நீ
எதைப் பார்த்து
கொடுத்தாய் உன்
தாய்க்கு என்னைக்
கண்டபோதெல்லாம்
பேசச் சொல்லி
வசைத் தமிழை ? !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (30-Oct-16, 9:07 am)
Tanglish : kaadhal thamizh
பார்வை : 81

மேலே