தமிழ் மொழி
நான் பிறக்கும் போது
என் நாவில் என்னோடு பிறந்த மொழி தமிழ் ...
இயல்பாக தோன்றிய
மொழி என் தமிழ் மொழி ....
ஒரு உலக பொது மறை
நூலை கொண்ட சிறப்பு மொழி....
இரு பெரும் காப்பியங்களான
சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
தோன்றிய மொழி....
மூன்று எழுத்து கொண்ட
முத்து மொழி ....
நான்கு மணிகளாக
நான்மணிக்கடிகை நூலை
கொண்ட நல்ல மொழி....
ஐந்து இலக்கணம் என்ற பெருமை
கொண்ட ஒரே மொழி...
ஆறு வல்லின எழுத்துக்கள்
கொண்ட மொழி ....
ஏழு கடல் தாண்டி
சென்றாலும் இது தான் மொழி ...
எட்டுதிக்கும் இனிக்கும்
இனிமையான மொழி ....
ஒன்பது கோள்களை ஆளும்
வல்லமையுடைய மொழி ....
பத்துப்பாட்டு நூலை
கொண்ட பழமையான மொழி....
புதுக்கவிதையினால்
புதுமையான மொழி...
செந்தமிழ் உயர்வு பெற்ற
செம்மொழி...
நான் வீழ்ந்தாலும்
எழுந்தாலும்
என்னுடன் வரும் மொழி ....
தமிழ் இனி மெல்ல சாகும்
யார் சொன்னது ....
எம் தமிழ் இனி உலகை
ஆளும் ....
தமிழில்லையேல் ஏது
இலக்கணம்
இலக்கியம் ....
ஏது வாழ்வு? ...
தமிழோடு வாழ்வோம்
தமிழ் பேசி வாழ்வோம் .....
கவியுடன்,
கிரிஜா.தி