சிரிப்பு மத்தாப்பூ

மைக்ரோ கதை.



அவள் கொடுத்த அதிரசத்தைத் தின்றவன் சொன்னான்.
” என்ன மென்மையா ருசியாயிருக்கு…? ” என்றான்.
அவள் கேட்டாள்.
அது என்ன அதிரசம் சொல்லுங்க…?
அவன் கொஞ்சம் முழித்தான்.
தெரியவில்லை? என்று சொல்லத் தயங்கினான்.
பிறகு, அவளே சொன்னாள்
“ அது அரிசி அதிரசம் இல்லே. கம்பு அதிரசம் ” என்றாள்.
“ அட, ஏதோவொன்னு ரெண்டுமே மென்மையா தானே இருக்கும் ” என்று சமாளித்தான்.
அது அரிசி அதிரசமா? கம்பு அதிரசமா? என்று கண்டுபிடிக்கக் கூட தெரியலே…? என்று கேலி செய்தாள்.
அவன் வெட்கப்பட்டான்.
அவளும் சிரித்தாள். அவனும் சிரித்தான்.
சிரிப்பு மத்தாப்பூ ஒளி வீசியது.
ந.க.துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன் (30-Oct-16, 2:41 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 321

மேலே