ஒரு சம்பவம்
ஊடகங்களில் பிரபல இந்திய சினிமா நடசத்திரங்களான கமலஹாசன், சாரூக்கான் போன்ற நடிகர்கள் அமெரிக்கா, கனடா விமான நிலையங்களில் குடிவரவு அதிகாரிகளால் பல மணி நேரம் தடுத்துவைக்கப்பட்டு குறுக்கு விசாரணை செயப்பட்டார்கள் என்ற செய்தி பலர் அறிந்ததே. இதன் முக்கிய காரணம் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள உல வர்த்தக நிலையம் அல்குவைதா பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உற்பட்டதே. அத்தாக்குதலை நடத்தியவர்கள் அனைவரும் முஸ்லீம்கள். அத்தாக்குதலுக்குப் பின் அமெரிக்காவிலும்> கனடாவிலும்; முஸ்லீம்களைச் சந்தேகக் கண்கொண்டே மக்களும் அரசும் பார்கத் தொட்ங்கினார்கள். செப்டம்;பர் 11ஆம் திகதி தாக்குதல் நடந்து சில நாட்களுக்கு பி;ன்னர் கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள ஹமில்டன் என்ற ஊரில் அமைந்த இந்து கோவிலையும்> முஸ்லீம்களின் மசூதியையும் சில மதத் தீவரவாதிகள் எரித்தனர். இது போன்று பல சம்பவஙகள் பல அறியாமை நிமித்தம் உலகில் பல பகுதிகளில் நடந்தன.
நான் 1979 ஆண்டு முதல் துபாயில் 12 வருடங்கள் எட்டிசலாட் (Etisalat) தொலை தொடர்பு ஸ்தாபனத்தில் மனேஜராக வேலை செய்தவன். குடும்பத்தோடு துபாயில் வாழ்ந்தவன். பல அரேபியர்கள் எனது உதவியாளர்களாக வேலை செய்தவர்கள். பலதடவை சிறீலங்கா> இந்தியா> இங்கிலாந்து> கனடாவுக்கு லீவுநாட்களில் குடும்பத்தோடு சென்று வந்தேன். எனக்கும் என் குடும்பத்துக்கும் துபாயில் வாழ்வதற்கு விசா இருந்தது.
1991 ஆம் ஆண்டு மே மாதம் ராஜீவ் காந்தி ஒரு தற்கொலைப் பெண் போராளியால் கொலை செய்யப்பட்டது பலர் அறி;ந்ததே. அச்சம்பவம் நடந்தது தமிழ்நாட்டில். பெண் தற்கொலைப் போராளி பிறந்தது இடம் யாழ்ப்பாணம்;. அந்தச் சம்பவத்துக்குப் பின் உலகில் பல விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. துபாயுக்கு வரும் சிறீலங்கா பாஸ்போர்ட் வைத்திருந்தவர்கள்> குடிவரவு அதிகாரிகளால் கடுமையாக விசாரிக்கப்பட்டனர். அப்படி விசாரணையின் போது என் மனைவி தடுத்து வைக்கப்பட்டது இன்றும் என் நினைவில் இருக்கிறது.
1991 ஆம் ஆண்டு ஜுலைமாதத்தில் எனக்கு லண்டனில் “இன்மார்சட் (Inmarsat)) என்ற தொலை தொடர்பு ஸ்தாபனத்தில் வெலைகிடைத்தது> என் மகளின் மேற்படிப்பிற்கு இங்கிலாந்தில் இருப்பது வசதியாக இருந்தது. லண்டன் போகமுன் என் குடும்பம் ஒரு கிழமை கொழும்புசென்று> அதன் பின்னர் துபாயூடாக லண்டன் செல்வது தான் என் திட்டம். துபாய் செல்வதன் காரணம் என்னுடன் வேலை செயதவர்களை கடைசி தடவை சந்தித்துப் பேசி விடைபெறுவதற்கு.
எமிரேட்;ஸ் எயார் லைன்சில் துபாயில் போய் இறங்கினோம். அந்த எயார் லைன்ஸ் தூபாயில் இரு தினங்கள் இலவசமாக ஹோட்டலில் தங்குவதற்கு ஒழுங்கு செய்திருந்தது. விமானத்தில் இருந்து இறங்கி இமிகிரெசனுக்குச் சென்றோம். எங்கள் பாஸ்போர்ட்டுகளை இமிகிரேசன் அதிகாரிகளிடம் கொடுத்தோம். அதை பல தடவை பார்த்தபின் சிலகேள்விகளை என்னிடம் அதிகாரி கேட்டார். “ எவ்வளவு காலம் துபாயில் வேலை செய்தனீர் என்று என்னைக் கேட்டார்” நான் உண்மையைச் சொன்னேன். நான் வேலை செய்தது தொலை எடிசலாட் என்ற தொலை தொடர்பு ஸ்தாபனத்தைப் பற்றியும்> நான் வகித்த மனேஜர் பதவி பற்றியும் குறிப்பிட்டேன். எல்லாவற்றையும் கேட்டபி;ன்னர் நானும் மகளும் வெளியே போக அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஆனால் என்மனைவி அனுமதி வழங்க முடியாது. அடுத்த லண்டன் பிளைட்டில் அவர் லண்டன் போயாக வேண்டும் என்றார்.
அதிகாரி என மனைவியை மாத்திரம் தடுத்து நிநுத்தியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் தடுத்து நிறுத்தினீர்கள் என்ற கேள்விக்கு இடமில்லை. அதிகாரியோடு பேசியும் பிரயோசனமில்லை என்பது எனக்குத் தெரியும். அமைதியாக பாஸ்போர்ட்டுகளை வாங்கிக் கொண்டு பயணிகள் இருக்கும் பகுதிக்கு வந்தேன். என் மனைவியில்லாமல் நானும் என் மகளும் தனியே எப்படி துபாயுக்குப் போவது எனச் சிந்தித்தேன். எனக்கு என்னுடைய உதவியாளராக வேலை செய்த அரேபியரான அகமதின் நினைவு தான் உடனே வந்தது. அகமத் துபாயை ஆட்சி செய்த அல்மக்தூம் குடும்பதின் உறவினர்;. அவரைத் துபாயில் பலருக்குத் தெரியும். உடனே அவரோடு தொலை பேசியில் தொடர்பு கொண்டு நடந்ததைச் சொன்னேன். பதினைந்து நிமிடங்களில் அவர் விமான நிலையத்துக்கு வந்து இமி;கிரேசன் அதிகாரியோடு பேசிக் கொண்டிருப்பதைக்கண்டேன். அவ்வளவு தான். என்மனைவியை வெளியே செல்லமுடியாது என நிராரித்த இமிகிரேசன் அதிகாரி. என்மனைவியை அழைத்து “நீங்களும் வெளியே போகலாம். அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
நான் “சுக்கிரன்” என்று அதிகாரிக்கு நன்றி கூறிவிட்டு குடும்பத்தோடு வெளியேவந்தேன்;.
எனது அரேபியர்; நணபர் அகமத் சிரித்தபடி நி;ன்றார். எங்கள் பாஸ்போர்ட்டை வாங்கி பார்த்தார். எனது மனைவியின் பாஸ்போர்ட்டை வாங்கி இரு தடவை பார்த்தார்.
“ ஏன் உமது மனைவிக்கு அதிகாரி அனுமதி வழங்கவில்லை என்பது இப்போ புரிகிறது” என்றார் சிரித்தபடி.
“ஏன் அகமத் சிரிக்கிறீர். அப்படி என்ன அனுமதி வழங்காததறகு காரணம்”?; அப்படி என்ன என் மனைவியின் பாஸ்போர்ட்டில் இருக்கிறது”? என்று அகமதைக் கேட்N;டன்.
“உம்முடைய பாஸ்போர்ட்டிலும் உமது மகனின்டை பாஸ்போர்ட்டிலும் நீஙகள் இருவரும் பிறந்த ஊர் கொழும்பு என்று இருக்கிறது. ஆனால் உமது மனைவியின் பாஸ்போர்ட்டில் அவர் பிறந்த ஊர் யாழ்ப்பாணம் (Jaffna) என்று இருக்கிறது. அது தான் பிரச்சனைக்கே காரணம்” என்றார்.
“ அகமத் எனக்கு விளங்கவில்லை “என்றேன்.
“ ரஜீவ்காந்தியை சில மாதங்களுக்கு முன்னர் கொலை செய்த பெண் தற்கொலைப் போராளி யாழ்ப்பாணத்தில் பிறந்தவள். அதன் பிறகு இமிகிரேசனில் சிறீலங்கன் பாஸ்போர்ட்டில பிறந்த ஊர் யாழ்ப்பாணமாக இருந்தால், அதுவும் பெண்ணாக இருந்தால் சந்தேகக் கண்கொண்டே பார்க்கிறார்கள்” என்றார்.
இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் என் குடும்பம் கனேடிய பிரஜைகளானபின்பு தமிழ் நாட்டுக்கு துபாய் ஊடாக செல்ல வெண்டியிருந்தது. துபாயில் சில நாட்கள் களிப்பது எங்கள் திட்டம். இந்தத் தடவை இமிகிரேசனில் ஒரு பிரச்சனையும் என் குடும்பத்துக்கு இருக்கவில்லை> காரணம் நாங்கள் வைத்திருந்தது கனேடிய பாஸ்போர்ட். என் மனைவி பிறந்த ஊர் யாழ்ப்பாணம் என்று அவருடைய பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்தாலும்> அவர் வைத்திருந்தது கனேடிய பாஸ்போர்ட். இது போன்ற சம்பவங்கள் என் வாழ்ககையிpல் எத்தனையோ நடந்திருக்கிறது.
*****

