வாடகை காதலி

காதல் செய்வதாக
என்னை உன்னில் வைத்து...

காதல் கடித்ததில்
என்னை மூழ்க வைத்து...

காதல் வலையில்
என்னை சிக்க வைத்து ...

காதல் சின்னமாய்
நீ என்னை வைத்து...

கற்கண்டாய் என்னை
நீ இனிக்க வைத்து...

காம வெறியில்
என்னை வேக வைத்து...

கற்பனையில் என்னை
மிதக்க வைத்து....

கண்டு கொள்ளாமல்
போகிறாயே...

காதலிப்பவனுக்கு எல்லாம்
நீ வாடகை காதலியா???

எழுதியவர் : மன்சூர் அலி சவூதி அரேபியா (30-Oct-16, 3:09 pm)
Tanglish : vaadagai kathali
பார்வை : 107

மேலே