என்று விடியும் எங்கள் இரவு
சில அதிகாரம் கொண்ட ஆண் இனமே!
வதைத்து பெண்ணை சிதைக்கிறாய்.
அடித்து அவளை உதைக்கிறாய்.
அடக்கிஆள நினைக்கிறாய்.
எதிர்த்து நின்றால் எரிக்கிறாய்.
உயிர்களை படைக்கும் உன்னத உயிரை
எடுக்க நீ துடிக்கிறாய்.
மலர் போன்ற மனதை கசக்கிடும் ஆணே,
வலிதரும் அரக்கனாய் நீ இருப்பது வீணே.
முழுதாய் சுதந்திரம் கிடைக்கவில்லையே..
ஆதிக்க ஆண்களை பிடிக்கவில்லையே..
சமநீதி தராத சமுதாயம்.
பெண்ணுக்கு இதனால் பெரும் காயம்.
ஆணுக்கு அடிமையாய் இன்னும் இருக்கிறார்.
அடிமன வலியை ஏனோ மறைக்கிறார்.
அனைத்திலும் ஆணேமுதன்மையாய்
இருப்பது இங்கே பெருமையாம்.
சமமாய் உரிமைகள் பெரும் நாளே
விடுதலை பெற்ற திருநாளாம்..