விண்ணைத் தொடு பெண்ணே

சமுத்திரம் ஒன்றை சிரட்டைக்குள் அடக்கும்......
வல்லமை கொண்டவளாய்
தாய்க் குலமாய் மதிக்கப்படும் பெண்ணோ......
போற்றப்படுகின்றாள் பூமியில்...!

பெண்ணே! உலகத்தைப் புரட்டுவது
தோசையைப் புரட்டுவது போல் எளிதானதல்ல...!

சமைப்பதும் துவைப்பதும்
மட்டுமல்ல உன் பணிகள்......
உண்மைகளை உரைப்பதும்
தீமைகளை உதைப்பதுமே....!

அப்போது மமதைகள் மருண்டு
உன் சொல்வாக்கும் செல்வாக்கும் ஏறி......
அடக்குமுறைகள் அருளும்..!


இப்போதே விழித்து திருத்தி
உன் பாதையில் நேர்வழியாய் செல்....
மாற்ற முடிந்ததை மாற்றி
மாற்ற முடியாததை ஏற்று
திட்டங்களை செயல் வடிவங்களில் காட்டு.....!

நாளை உலகம் உன் வசமாய் விண்ணைத் தொடுவாய் பெண்ணே!!!

எழுதியவர் : சி.பிருந்தா (31-Oct-16, 11:51 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 223

மேலே