விடிந்தால் இரவு

தன்னை நம்பியுள்ள குடும்பத்தை மறந்தவனாய்.. தன் சுகத்திற்காய் மதுவை அருந்தி தினமும் வாழ்கின்றான் சுயநலமனிதனாய்...!

பலரின் பார்வைக்குக் குடிகாரனாய் வீதியிலே கிடக்கின்றான் போதை தலைக்கேறியதால்....!

குடியால் அழிவது தன் குடும்பம் மட்டுமல்ல தானுமே என்பதை அறியாது மிதக்கின்றான்
மதுக்கடலிலே.....!

பழக்கப்பட்டுப் போவதால்
கெட்ட பழக்கம்கூட வழக்கமாகிப் போகிறது அவனுக்கு...!
நலமிழந்து போகின்றான் பலமிழந்த பழக்கங்களால்.....!

குடிபழக்கத்திலிருந்து விடுபட்டு அவன் குடியை மறந்தால் விடியும் அவன் வாழ்வு விடிந்தால் இருளற்ற இரவே அவனுக்கு.....!!!

எழுதியவர் : சி.பிருந்தா (31-Oct-16, 11:57 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : vidinthaal iravu
பார்வை : 70

மேலே