உன்னை மட்டும் சுமக்கிறது இதயம்

இந்தியவரைபடத்தை ............
இதயமாக கொண்டவளே !
இதய துடிப்பினில்
என்னை உணர்ந்தவளே
இதய அறைக்குள்
என்னை அடைத்துவைத்து
ஏனடி? பெண்ணே !
இம்சை செய்கிறாய் ?
என் சிந்தையை செயலிழக்கும்
உன் விந்தையான பார்வை
ஊடுருவி உள்ளே தாக்கும்
அபாயகரமான ஆயுதம் ?
எந்த நாட்டுஏவுகணையாலும்
எதிர் கொள்ளமுடியாத
உன் பார்வை !
என்இதயத்தை
என்ன செய்துகொண்டிருக்கிறது
தெரியுமா !
உள்ளங்கை வடிவில் இருக்கும்
என் இதயத்தில்
உன்னை மட்டும்தானடி
சுமந்து கொண்டிருக்கிறேன்

எழுதியவர் : இரா .மாயா (31-Oct-16, 7:43 pm)
பார்வை : 82

மேலே