என்னை கட்டி தழுவும் உன் கைகள் 555

உயிரே...

உனக்கு நினைவிருக்கா
நம் முதல் சந்திப்பு...

பேருந்தில் நான் ஏற கால் இடறி
உன் மடியில் விழுந்தது என் கைபேசி...

கல்லூரி ஒன்று என்றாலும்
வகுப்பப்பிறை வேறுவேறுதானே...

நீ கொடுக்கும் உணவை நான்
உண்ணாமலிருந்தால்...

நீயும் தூக்கி எரிந்து
உண்ணமாட்டாய்...

முடித்த பேச்சை மீண்டும் மீண்டும்
என்னிடம் கேட்டு ரசிப்பாய்...

நான் பரிசளித்த கால் கொலுசிற்கு
பெயர் கண்டுபிடித்தாய்...

நான் தரும் காதல் கடிதங்களுக்கு
ஆல்பம் செய்தாய்...

கைகளுக்கு எட்டாத பூவை
ஆசைப்பட்டு கேட்பாய்...

பறித்துக்கொடுத்தால்
தூக்கி எறிவாய் என்மீது...

நடக்காமல் நடப்பாய்
என்னுடன் நீ...

பேசாமல் பேசுவாய்
விழிகளால் என்னிடம்...

உறங்காமல் உறங்கினேன்
உன் மடியில் நான்...

கன்னம் கடித்தால்
வலிக்காமல் சினுங்குவாய்...

சிரிக்காமல் மெல்ல சிரிப்பாய்
என்னை கண்டதும்...

குழாய் நீரை கையில் ஏந்தி
மாறிமாறி என் முகத்தில் வீசுவாய்...

விடைபெற விருப்பமில்லை
என்றாலும்...

அடிக்கடி போயிட்டு
வருகிறேன் என்பாய்...

அன்று காதல் இம்சை
செய்தாய் என்னிடம்...

இன்றும் நான் உறங்குகிறேன்
உன் மடியில் நான்...

அன்று வருடிய உன் விரல்கள்
இன்றும் என்னை வருடுதடி...

என் அன்பு மனைவியே...

இனி ஜென்மம் இருந்தால்
நீயே வேண்டுமடி...

காதலியாகவும் மனைவியாகவும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (31-Oct-16, 8:15 pm)
பார்வை : 342

மேலே