நாற்காலியும், சோபாவும்
அண்ணா முதலமைச்சராகப் பதவி ஏற்றதும்
அதிகாரிகள் வந்து, அண்ணா வீட்டு ஹாலில்
அரசாங்க நாற்காலிகளையும்,
சோபாவையும் கொண்டுவந்து போட்டு
அழகுபடுத்தினர்.
-
அண்ணா வந்து பார்த்துவிட்டு, இந்த
ஆடம்பரம் தேவையில்லை. சோபா,
நாற்காலிகளை எடுத்துச் செல்லுங்கள்
என்றார்.அண்ணா ஏன் அப்படி சொன்னார்? அதற்கு
ரகசியமானஇன்னொரு காரணமும் உண்டு.
முதலமைச்சர் பதவியை இழந்திருந்தார்
பக்தவத்சலம்.அவர் மகள், அண்ணாவுக்கு போன் செய்தார்."எங்கள் வீட்டில் போடப்பட்டுள்ள அரசாங்க
மேசை, நாற்காலிகளை அதிகாரிகள் வந்து
எடுக்கின்றனர்.
எங்களுக்கு உட்கார நாற்காலி இல்லை.
நீங்கள் அதிகாரிகளிடம் சொல்லி ஒரு வாரம்
“டைம்’ கொடுத்தால், அதற்குள் நாங்கள் வேறு
மேசை, நாற்காலிகளை ஏற்பாடு பண்ணிக்
கொள்வோம். அப்பா உங்களிடம் சொல்லச்
சொன்னார்…” என்றார்!
-
அண்ணா, உடனே அதிகாரிகளைத் தொடர்பு
கொண்டு, “நான் சொல்லும் வரை பக்தவத்சலம்
வீட்டிலிருந்து மேசை, நாற்காலிகளை எடுக்கக்
கூடாது, என்று உத்தரவிட்டதோடு, தன் வீட்டில்
போட்டவற்றையும் எடுத்துப் போகச் சொல்லி
விட்டார்.
-
-
-
(பெரிய மனிதர்களின் அரிய சாதனைகள் நூலிலிருந்து)